பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இராணுவத்திற்கு இல்லை - தே.பா.ஊ.ம.நி

July 26, 2012  09:52 am

Bookmark and Share
யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கு இராணுவத்தினர் மரண சான்றிதழ் வழங்கி வருவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தின் போது காணாமல் போனவர்களுக்கு இராணுவத்தினர் பலாத்காரமாக மரண சான்றிதழ் வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி மாவட்ட பதிவாளருக்கே பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் உள்ளதென அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போன நபர்கள் குறித்து செயற்பட வேண்டிய முறை தொடர்பில் 2010 19ம் இலக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கோ ஏனைய பாதுகாப்பு பிரிவினருக்கோ பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இராணுவத்தின் மீது சுமத்தப்படும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பொது மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு காணப்படும் நம்பிக்கையை இல்லாது செய்யுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் போனவர்கள், மற்றும் சரணடைந்தவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பதற்கு இராணுவத்தினர் முயன்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் குற்றம்சாட்டியுள்ளார்.

இராணுவத்திற்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் காணமல் போனவர்களுடைய பெற்றோர்கள் அழைக்கப்பட்டு இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் வெள்ளைப் பேப்பர்களில் கையொப்பமும் வாங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின்போது காணமல் போனவர்கள் என்று நீண்ட காலமாக விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், அவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரம் மிக வரைவில் வழங்கப்படவுள்ளதாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதென சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

(அத தெரண - தமிழ்)

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.